twitter
rss




 ஸ்டீவ் ஜொப்ஸின் வாழ்நாள் மற்றும் அப்பிள் நிறுவன வரலாற்றில் சில முக்கிய தருணங்கள் 

1955: ஸ்டீவன் போல் ஜொப்ஸ் பெப்ரவரி 24 ஆம் திகதி பிறந்தார்.

1972: ஜொப்ஸ் போர்ட்லேண்டில் உள்ள ரீட் கல்லூரியில் இணைந்தார் எனினும் முதல் செமஸ்டரிலேயே அதனை நிறுத்திவிட்டார்.

1974-ம் ஆண்டு ஆன்மீக அமைதி தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்தார். பின், உத்திர பிரதேசத்தில் உள்ள கைஞ்சி ஆசிரமத்திற்கு தனது கல்லூரி நண்பருடன் சென்று நீம் கரோலி பாபாவை தரிசனம் செய்தார். அவரது போதனைகளில் மனம் மாறிய ஜாப்ஸ், அவரை தன்னுடைய ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டார். அதுவே அவர் புத்த மதத்தை தழுவ காரணமாக இருந்தது.

1976: அப்பிள் கணனியை ஏப்ரல் முதலாம் திகதி உருவாக்கினார். த அப்பிள் I கணனி 666.66 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனைக்கு வருகின்றது.

1977: அப்பிள் நிறுவனம் கூட்டு நிறுவனமாக்கப்படுகின்றது. த அப்பிள் II கணனி அறிமுகப்படுத்தப்படுகின்றது.

1978: ஸ்டீவ் ஜொப்ஸின் மகள் லிஸா பிறந்தார்.

1980: அப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது பங்குகளை வெளியிட்டது (Initial public offering). 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டிக் கொண்டது.

1982: அப்பிள் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாய் அதிகரிக்கின்றது.

1983: அப்பிளின் லிசா கணனிகள் விற்பனைக்கு வருகின்றன.

1984: அப்பிளின் மெகிண்டொஸ் கணனிகள் விற்பனைக்கு வருகின்றன.

1985: நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கூலி மற்றும் ஜொப்ஸ் இடையே மோதல், ஜொப்ஸ் மற்றும் வொஸ்னிஹக் ஆகியோர் அப்பிளில் இருந்து பதவி விலகுகின்றனர்.

1986: ஜொப்ஸ் நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததுடன், உயர் தொழிநுட்பம் கொண்ட கணனிகளை பல்கலைக்கழகங்களுக்கென தயாரிக்கத்தொடங்குகின்றார்.

1989: முதலாவது நெக்ஸ்ட் கணனி விற்பனைக்கு செல்கின்றது. விலை 6,500 அமெரிக்க டொலர்கள்.

1991: அப்பிள் மற்றும் ஐ.பி.எம் நிறுவனங்கள் இணைந்து கணனிகளுக்கான புதிய மைக்ரோபுரசசர்கள் மற்றும் மென்பொருட்களை உருவாக்கவுள்ளதாக அறிவித்தன.

பவர்புக் என்றழைக்கப்படும் காவிச்செல்லக்கூடிய மெக்ஸ் கணனிகளை அறிமுகப்படுத்துகின்றது.

ஜொப்ஸ் லொரன் பவல் என்பவரை சட்டப்படி மணக்கின்றார்.

1996: ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அவரது குழு இணைந்து உருவாக்கிய நெக்ஸ்ட் நிறுவனத்தின் இயங்குதளத்தினை 430 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் திட்டத்தினை அப்பிள் அறிவிக்கின்றது.

1997: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.

2000: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.

2001: முதல் ஐ பொட் விற்பனைக்கு வருகின்றது. ஐ டியூன்ஸ் மென்பொருளை வெளியிடுகின்றது.

2004: கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜொப்ஸ் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.

2006: ஜொப்ஸ் டிஸ்னி நிறுவனத்தின் அதி கூடிய பங்குகளைக் கொண்ட தனிநபராகின்றார்.

2007: அப்பிள் தனது முதல் கையடக்கத் தொலைபேசியான ஐ போனை வெளியிடுகின்றது.

2009: ஜொப்ஸ் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.

2011 ஜனவரி 17: ஜொப்ஸ் 2 ஆவது முறையாக மருத்துவ விடுமுறையில் செல்வதாக அறிவிக்கின்றார்.

2011 ஓகஸ்ட் 24: ஜொப்ஸ் தான் அப்பிளின் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கின்றார்.

2011 ஒக்டோபர் 5: ஜொப்ஸ் காலமானதாக அறிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவர் எனவும், வித்தியாசமாக யோசிக்கத் தைரியமுள்ளவர் எனவும், தன்னால் உலகை மாற்றமுடியும் என்பதை நம்புபவர் எனவும் அதை செய்து காட்டும் திறமையும் கொண்டவர் என ஒபாமா  தனது அஞ்சலி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


                                                      கவிஞர் வாலி



01. எம்.ஜி.ஆருக்கு 63 படங்களிலும், சிவாஜிக்கு 76 படங்களிலும், கமல் - ரஜினி, விஜய் - அஜித், தனுஷ் - சிம்பு, என்று பல தலைமுறைக்குப் பாட்டெழுதிய ஒரே கவிஞர் வாலி மட்டும்தான்.

 02. 1958இல் "அழகர்மலை கள்ளன்' என்ற படத்தில் பாடல் முதன் முதலாகப் பாடல் எழுதத் தொடங்கினார் வாலி.தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்று விளங்கிய ‘டி. எம். சௌந்தரராஜன்’ அவர்களால், சினிமாவிற்கு பாட்டெழுத சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.  

 03. கவிஞர் வாலி எட்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே பார்த்தவரை அப்படியே வரையும் ஆற்றல் பெற்று விளங்கினார். அதனால் அப்போது ஆனந்த விகடனில் பிரபல ஓவியராக இருந்த மாலி மீது இவருக்கு மாளாக் காதல் இருந்தது. இதை உணர்ந்த வாலியின் பள்ளிக்காலத் தோழர் பாபு என்பவர் "நீ மாலியைப் போல வரவேண்டும்' ரங்கராஜனை வாலி ஆக்கினார்.

 04. வயதான பிறகு பீல்டில் இருக்கமாட்டார்கள். அப்படி பீல்டில் இருந்தாலும் பெரிதாக எடுபடாது. வேண்டா வெறுப்பாகத்தான் அதை ரசிகர் பார்ப்பார்கள்; கேட்பார்கள். ஆனால் அப்படி எந்த மாற்றமும் இன்றி 82வயது வரை ரசிக்கும்படியான பாடல்கள் தந்த ஒரு பாடலாசிரியர் வாலி.

 05. கவிஞரை "என்ன ஆண்டவனே' என்று எம்.ஜி.ஆரும்,
 "என்ன வாத்தியாரே' என்று சிவாஜிகணேசனும்
 அன்புடன் அழைப்பார்கள்.

 06. ஸ்ரீரங்கத்தில் வாலி நடத்திய "நேதாஜி' என்ற கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அப்படிப் பங்கேற்றுக் கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனார். அவர்தான் எழுத்தாளர் சுஜாதா.கையெழுத்து பத்திரிக்கையின் முதல் பிரதியை வெளியிட்டவர் புகழ்பெற்ற எழுத்தாளர் ‘கல்கி’ ஆவார். 

 07. 15000 பாடல் என்பது அவர் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை. இதுவரை இந்த இலக்கை எந்தப் பாடலாசிரியரும் தொட்டதில்லை. இனி தொடப்போவதுமில்லை!.

 08. கவிஞர் வாலி, சினிமா வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில், தொடர்ந்து ஏற்பட்ட தோல்விகளால் ஊருக்குத் திரும்ப முயன்றார். அந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய "மயக்கமா... கலக்கமா...' என்ற பாடலைக் கேட்டுத்தான், நம்பிக்கையோடு வீடு திரும்பினார். அந்த நம்பிக்கை, தமிழ்த் திரையுலகிற்கு மிகப்பெரிய பாடலாசிரியரைத் தந்துவிட்டது.

 09. "உதயசூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே...' என்று பகிரங்கமாக திமுக சின்னத்தையே, எம்.ஜி.ஆர் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் கவிஞர் வாலி.

 10. திரைப்படப் பாடலாசியர் கவிஞர் கண்ணதாசன் அமர்ந்து கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் அவருக்கு இணையாக சிம்மாசனமிட்டு அமர்ந்து காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான பாடல்களைத் தந்தவர் வாலி.

 11. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஹரீஷ் ஜெயராஜ், வித்யாசாகர், தேவா முதற்கொண்டு, இன்றைய ஜீ.வி.பிரகாஷ் குமார், அனிருத் வரை அநேகமாக தமிழ்த் திரையுலகின் அத்தனை இசையமைப்பாளர்களின் இசையமைப்புக்கும் பாடல் புனைந்த கவிஞர் வாலி.

 12. 1966ஆம் வருடம் முதன் முதலாக கருணாநிதியை "மணி மகுடம்' படப்பிடிப்பில் சந்தித்தார் வாலி. அன்று தொடங்கி தனது இறுதிக் காலம் வரை துளி பிசிறில்லாம் இருவரும் நண்பர்களாகவே இருந்தார்கள்.

 13. கவிஞர் வாலி மிகப்பெரிய பாடலாசிரியராக இருந்தாலும், பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும், கவியரங்க மேடைகளில் முதன்மை இடம் வகித்திருந்தாலும் இதுவரை அவர் வெளிநாடு சென்றதில்லை. அதனால் அவரை எல்லோரும் "பாஸ்போர்ட் இல்லாத கவிஞர்' என்று சொல்வார்கள்.

 14. "அம்மா என்றழைக்காத உயிரில்லையே...' பாடலின் வரிகளில் உள்ள தாய்மையின் மேன்மையை உணர்ந்து அந்தப் பாடலை, திருச்சியிலுள்ள ஒரு கோவிலில் கல்வெட்டாகச் செதுக்கி வைத்துள்ளார்கள்.

 15. எம்.ஜி.ஆருக்கு அரசியல் ரீதியாக பலமாக உதவியவை கவிஞரின் பாடல்கள். அந்தத் திரை நாயகனை அரசியல் சிம்மாசனத்துக்குக் கொண்டு போன பெருமைக்கு வாலிக்கு உண்டு.

 16. "உங்கள் பாடல்கள் தி.மு.கவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியிருக்கிறது' என்று அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரையே 1967 வெற்றிக்குப் பிறகு, வாலியிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

 17. காதல், நகைச்சுவை, தத்துவம், கலகலப்பு, காதல் தோல்வி, பக்தி எனப் பல்வேறு நிலைப்பாடுகளில் 15000 பாடல்களுக்கு மேல் எழுதி சாதனை படைத்தவர் வாலி. கிட்டதட்ட 60 ஆண்டுகாலம் அவர் எழுதிய பாடல்கள் திரைத்துரையை அலங்கரித்துள்ளன.