twitter
rss
 ஸ்டீவ் ஜொப்ஸின் வாழ்நாள் மற்றும் அப்பிள் நிறுவன வரலாற்றில் சில முக்கிய தருணங்கள் 

1955: ஸ்டீவன் போல் ஜொப்ஸ் பெப்ரவரி 24 ஆம் திகதி பிறந்தார்.

1972: ஜொப்ஸ் போர்ட்லேண்டில் உள்ள ரீட் கல்லூரியில் இணைந்தார் எனினும் முதல் செமஸ்டரிலேயே அதனை நிறுத்திவிட்டார்.

1974-ம் ஆண்டு ஆன்மீக அமைதி தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்தார். பின், உத்திர பிரதேசத்தில் உள்ள கைஞ்சி ஆசிரமத்திற்கு தனது கல்லூரி நண்பருடன் சென்று நீம் கரோலி பாபாவை தரிசனம் செய்தார். அவரது போதனைகளில் மனம் மாறிய ஜாப்ஸ், அவரை தன்னுடைய ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டார். அதுவே அவர் புத்த மதத்தை தழுவ காரணமாக இருந்தது.

1976: அப்பிள் கணனியை ஏப்ரல் முதலாம் திகதி உருவாக்கினார். த அப்பிள் I கணனி 666.66 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனைக்கு வருகின்றது.

1977: அப்பிள் நிறுவனம் கூட்டு நிறுவனமாக்கப்படுகின்றது. த அப்பிள் II கணனி அறிமுகப்படுத்தப்படுகின்றது.

1978: ஸ்டீவ் ஜொப்ஸின் மகள் லிஸா பிறந்தார்.

1980: அப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது பங்குகளை வெளியிட்டது (Initial public offering). 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டிக் கொண்டது.

1982: அப்பிள் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாய் அதிகரிக்கின்றது.

1983: அப்பிளின் லிசா கணனிகள் விற்பனைக்கு வருகின்றன.

1984: அப்பிளின் மெகிண்டொஸ் கணனிகள் விற்பனைக்கு வருகின்றன.

1985: நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கூலி மற்றும் ஜொப்ஸ் இடையே மோதல், ஜொப்ஸ் மற்றும் வொஸ்னிஹக் ஆகியோர் அப்பிளில் இருந்து பதவி விலகுகின்றனர்.

1986: ஜொப்ஸ் நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததுடன், உயர் தொழிநுட்பம் கொண்ட கணனிகளை பல்கலைக்கழகங்களுக்கென தயாரிக்கத்தொடங்குகின்றார்.

1989: முதலாவது நெக்ஸ்ட் கணனி விற்பனைக்கு செல்கின்றது. விலை 6,500 அமெரிக்க டொலர்கள்.

1991: அப்பிள் மற்றும் ஐ.பி.எம் நிறுவனங்கள் இணைந்து கணனிகளுக்கான புதிய மைக்ரோபுரசசர்கள் மற்றும் மென்பொருட்களை உருவாக்கவுள்ளதாக அறிவித்தன.

பவர்புக் என்றழைக்கப்படும் காவிச்செல்லக்கூடிய மெக்ஸ் கணனிகளை அறிமுகப்படுத்துகின்றது.

ஜொப்ஸ் லொரன் பவல் என்பவரை சட்டப்படி மணக்கின்றார்.

1996: ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அவரது குழு இணைந்து உருவாக்கிய நெக்ஸ்ட் நிறுவனத்தின் இயங்குதளத்தினை 430 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் திட்டத்தினை அப்பிள் அறிவிக்கின்றது.

1997: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.

2000: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.

2001: முதல் ஐ பொட் விற்பனைக்கு வருகின்றது. ஐ டியூன்ஸ் மென்பொருளை வெளியிடுகின்றது.

2004: கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜொப்ஸ் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.

2006: ஜொப்ஸ் டிஸ்னி நிறுவனத்தின் அதி கூடிய பங்குகளைக் கொண்ட தனிநபராகின்றார்.

2007: அப்பிள் தனது முதல் கையடக்கத் தொலைபேசியான ஐ போனை வெளியிடுகின்றது.

2009: ஜொப்ஸ் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.

2011 ஜனவரி 17: ஜொப்ஸ் 2 ஆவது முறையாக மருத்துவ விடுமுறையில் செல்வதாக அறிவிக்கின்றார்.

2011 ஓகஸ்ட் 24: ஜொப்ஸ் தான் அப்பிளின் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கின்றார்.

2011 ஒக்டோபர் 5: ஜொப்ஸ் காலமானதாக அறிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவர் எனவும், வித்தியாசமாக யோசிக்கத் தைரியமுள்ளவர் எனவும், தன்னால் உலகை மாற்றமுடியும் என்பதை நம்புபவர் எனவும் அதை செய்து காட்டும் திறமையும் கொண்டவர் என ஒபாமா  தனது அஞ்சலி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


                                                      கவிஞர் வாலி01. எம்.ஜி.ஆருக்கு 63 படங்களிலும், சிவாஜிக்கு 76 படங்களிலும், கமல் - ரஜினி, விஜய் - அஜித், தனுஷ் - சிம்பு, என்று பல தலைமுறைக்குப் பாட்டெழுதிய ஒரே கவிஞர் வாலி மட்டும்தான்.

 02. 1958இல் "அழகர்மலை கள்ளன்' என்ற படத்தில் பாடல் முதன் முதலாகப் பாடல் எழுதத் தொடங்கினார் வாலி.தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்று விளங்கிய ‘டி. எம். சௌந்தரராஜன்’ அவர்களால், சினிமாவிற்கு பாட்டெழுத சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.  

 03. கவிஞர் வாலி எட்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே பார்த்தவரை அப்படியே வரையும் ஆற்றல் பெற்று விளங்கினார். அதனால் அப்போது ஆனந்த விகடனில் பிரபல ஓவியராக இருந்த மாலி மீது இவருக்கு மாளாக் காதல் இருந்தது. இதை உணர்ந்த வாலியின் பள்ளிக்காலத் தோழர் பாபு என்பவர் "நீ மாலியைப் போல வரவேண்டும்' ரங்கராஜனை வாலி ஆக்கினார்.

 04. வயதான பிறகு பீல்டில் இருக்கமாட்டார்கள். அப்படி பீல்டில் இருந்தாலும் பெரிதாக எடுபடாது. வேண்டா வெறுப்பாகத்தான் அதை ரசிகர் பார்ப்பார்கள்; கேட்பார்கள். ஆனால் அப்படி எந்த மாற்றமும் இன்றி 82வயது வரை ரசிக்கும்படியான பாடல்கள் தந்த ஒரு பாடலாசிரியர் வாலி.

 05. கவிஞரை "என்ன ஆண்டவனே' என்று எம்.ஜி.ஆரும்,
 "என்ன வாத்தியாரே' என்று சிவாஜிகணேசனும்
 அன்புடன் அழைப்பார்கள்.

 06. ஸ்ரீரங்கத்தில் வாலி நடத்திய "நேதாஜி' என்ற கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அப்படிப் பங்கேற்றுக் கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனார். அவர்தான் எழுத்தாளர் சுஜாதா.கையெழுத்து பத்திரிக்கையின் முதல் பிரதியை வெளியிட்டவர் புகழ்பெற்ற எழுத்தாளர் ‘கல்கி’ ஆவார். 

 07. 15000 பாடல் என்பது அவர் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை. இதுவரை இந்த இலக்கை எந்தப் பாடலாசிரியரும் தொட்டதில்லை. இனி தொடப்போவதுமில்லை!.

 08. கவிஞர் வாலி, சினிமா வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில், தொடர்ந்து ஏற்பட்ட தோல்விகளால் ஊருக்குத் திரும்ப முயன்றார். அந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய "மயக்கமா... கலக்கமா...' என்ற பாடலைக் கேட்டுத்தான், நம்பிக்கையோடு வீடு திரும்பினார். அந்த நம்பிக்கை, தமிழ்த் திரையுலகிற்கு மிகப்பெரிய பாடலாசிரியரைத் தந்துவிட்டது.

 09. "உதயசூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே...' என்று பகிரங்கமாக திமுக சின்னத்தையே, எம்.ஜி.ஆர் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் கவிஞர் வாலி.

 10. திரைப்படப் பாடலாசியர் கவிஞர் கண்ணதாசன் அமர்ந்து கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் அவருக்கு இணையாக சிம்மாசனமிட்டு அமர்ந்து காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான பாடல்களைத் தந்தவர் வாலி.

 11. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஹரீஷ் ஜெயராஜ், வித்யாசாகர், தேவா முதற்கொண்டு, இன்றைய ஜீ.வி.பிரகாஷ் குமார், அனிருத் வரை அநேகமாக தமிழ்த் திரையுலகின் அத்தனை இசையமைப்பாளர்களின் இசையமைப்புக்கும் பாடல் புனைந்த கவிஞர் வாலி.

 12. 1966ஆம் வருடம் முதன் முதலாக கருணாநிதியை "மணி மகுடம்' படப்பிடிப்பில் சந்தித்தார் வாலி. அன்று தொடங்கி தனது இறுதிக் காலம் வரை துளி பிசிறில்லாம் இருவரும் நண்பர்களாகவே இருந்தார்கள்.

 13. கவிஞர் வாலி மிகப்பெரிய பாடலாசிரியராக இருந்தாலும், பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும், கவியரங்க மேடைகளில் முதன்மை இடம் வகித்திருந்தாலும் இதுவரை அவர் வெளிநாடு சென்றதில்லை. அதனால் அவரை எல்லோரும் "பாஸ்போர்ட் இல்லாத கவிஞர்' என்று சொல்வார்கள்.

 14. "அம்மா என்றழைக்காத உயிரில்லையே...' பாடலின் வரிகளில் உள்ள தாய்மையின் மேன்மையை உணர்ந்து அந்தப் பாடலை, திருச்சியிலுள்ள ஒரு கோவிலில் கல்வெட்டாகச் செதுக்கி வைத்துள்ளார்கள்.

 15. எம்.ஜி.ஆருக்கு அரசியல் ரீதியாக பலமாக உதவியவை கவிஞரின் பாடல்கள். அந்தத் திரை நாயகனை அரசியல் சிம்மாசனத்துக்குக் கொண்டு போன பெருமைக்கு வாலிக்கு உண்டு.

 16. "உங்கள் பாடல்கள் தி.மு.கவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியிருக்கிறது' என்று அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரையே 1967 வெற்றிக்குப் பிறகு, வாலியிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

 17. காதல், நகைச்சுவை, தத்துவம், கலகலப்பு, காதல் தோல்வி, பக்தி எனப் பல்வேறு நிலைப்பாடுகளில் 15000 பாடல்களுக்கு மேல் எழுதி சாதனை படைத்தவர் வாலி. கிட்டதட்ட 60 ஆண்டுகாலம் அவர் எழுதிய பாடல்கள் திரைத்துரையை அலங்கரித்துள்ளன.

சர்வதேச உளவு அமைப்புக்கள்
The international intelligence organizations.

1.India (இந்தியா) - RAW

2.America (அமெரிக்கா) - CIA

3.Pakistan (பாக்கிஸ்தான்) - ISI

4.Russia (ரஷ்யா) - SVR

5.Australia (அவுஸ்ரேலியா) - ASIS

6.Afghanisthan (ஆப்கானிஸ்தான்) - NDS

7.Albania (அல்பேனியா) - SHISH

8.Sweden (சுவீடன்)- MUST

9.Turkey (துருக்கி) - MIT

10.China (சீனா) - Guoanbu

11.Iran (ஈரான்) - VEVAK

12.Ireland (அயர்லாந்து) - G2

13.Argentine (அர்ஜென்டீனா) - SIDE

14.Britain (பிரிட்டன்) - M16

15.Belgium (பெல்ஜியம்) - ADIV

16.Brazil (பிரேசில்) - ABIN

17.Canada (கனடா) - CSIS

18.Germany (ஜேர்மனி) - BND

19.Germany (ஜேர்மனி) - MAD

20.Colombia (கொலம்பியா) -DAS

21.Denmark(டெண்மார்க்) - FE

22.Finland (பின்லாந்து) - SUPO

23.China (சீனா) - MSS

24.Italy (இத்தாலி) - AISE

25.Japan (ஜப்பான்) - Naicho

26.Indonesia(இந்தோனேஷியா) - BIN

27.Israel (இஸ்ரேல்) - Mosad

28.France (பிரான்ஸ்) - DGSE

29.Greece(கிறீஸ்) - NIS

30.Netherland (நெதர்லாந்து) - AIVD

31. Cuba (கியூபா) - DI

32.Belarus (பெலருஸ்) - KGB

உலகநாடுகளின் பாராளுமன்றங்களின் பெயர்கள்.
 1.  இந்தியா -  மக்களவை, மாநிலங்களவை
 2. இங்கிலாந்து -  பார்லிமென்ட்
 3. ஆஸ்திரியா  -  ரெய்ஸ்ராத்
 4. பல்கேரியா  -  சோப்ராஞ்சி
 5. டென்மார்க்  -  ரிக்ஸ்தாக் 
 6. அயர்லாந்து  -  டய்ல்ஜரான்
 7. பிரான்சு  -  தேசிய அசெம்ப்ளி
 8. ஜெர்மனி   -  ரெய்ஸ்டாக்,புன்தஸ்டாக்
 9. ஐஸ்லாந்து  - அல்திங் 
 10. இஸ்ரேல்  -  நெஸ்ட் 
 11. இத்தாலி   -  செனேட் 
 12. ஜப்பான்   -  டையட்
 13. நெதர்லாந்து  -  ஸ்டேட்ஸ்ஜெனரல்
 14. நார்வே  -  ஸ்டேர்டிங்  
 15. பெர்சியா -  மஜ்லிங்
 16. போலந்து   -  செஜம்
 17. போர்சுகல்   -  கோர்ட்ஸ்
 18. ரஷ்யா   -   சுப்ரீம் சோவியத்
 19. ஸ்பெயின்  -   கோர்ட்ஸ்
 20. ஸ்வீடன்  -   ரிக்ஸ்டாக்
 21. சுவிட்சர்லாந்து  -  பெடரல் அசெம்ப்லி
 22. சிரியா   -   மஜ்லிங்-அய்-நெளவம்
 23. அமெரிக்கா  -   காங்கிரஸ்
Country Parliament
Afghanistan Shora
Andorra General Council
Albania People's Assembly
Azerbaijan Melli Majlis
Algeria National People's Assembly
Angola National People's Assembly
Argentina National Congress
Australia Federal Parliament
Austria National Assembly
Bahamas General Assembly
Bahrain Consultative Council
Bangladesh Jatiya Sansad
Belize National Assembly
Bhutan Tsogdu
Bolivia National Congress
Brazil National Congress
Brunei National Assembly
Botswana National Assembly
Britain Parliment (House of Common's and House of Lords)
Bulgaria Narodno Subranie.
Cambodia National Assembly
Congo Democratic Rep. of National Legislative Council
Colombia Congress
Canada Parliament
China National People's Assembly
Chile Chamber of Deputies and Senate
Comoros Legislative Council and Senate
Costa Rice Legislative Council and Senate
Crotia Sabor
Cuba National Assembly of People's Power
Czech Republic Chamber of Deputies and Senate
Denmark Folketing
Ecuador Natinal Congress
El Salvador Legislative Assembly
East Timor Constituent Assembly
Ethiopia Federal Council and House of Representative
Egypt People's Assembly
Fiji Islands Senate & House of Representative
France National Assembly
Finland Eduskusta (Parliament)
Germany Bundestag (Lower House) and Bundesrat (Upper House)
Guyana National Assembly
Greece Chamber of Deputies
Hungry National Assembly
Iceland Althing
India Sansad
Indonesia People's Consultative Assembly
Iran Majlis
Iraq National Assembly
Israel Knesset
Italy Chamber of Deputies and Senate
Japan Diet
Jordan National Assembly
Korea(North) Supreme People's Assembly
Korea(South) National Assembly
Kuwait National Assembly
Laos People's Supreme Assembly
Labanon National Assembly
Lesotho National Assembly and Senate
Lithuania Seimas
Luxembourg Chamber of Deputies
Libya General People's Congress
Malaysia Dewan Rakyat and Dewan Negara
Maldives Majlis
Madagascar National People's Assembly
Mongolia Great People's Khural
Montenegro Federal Assembly
Mozambique People's Assembly
Myanmar Pyithu Hluttaw
Nepal Rashtriya Panchayat
Netherlands The Staten General
New Zealand Parliament (House of Representative)
Oman Monarchy
Pakistan National Assembly & Senate
Paraguay Senate & Chamber of Deputies
Philippines The Congress
Papua New Guinea National Parliament
Poland Sejm
Romania Great National Assembly
Russia Duma & Federal Council
Serbia Federal Assembly
Senegal National Assembly
Seychelles People's Assembly
South Africa Rep. House of Assembly
Spain Cortes
Sweden Riksdag
Saudi Arabia Majlis Al Shura
Sudan Majlis Watani
Switzerland Federal Assembly
Syria People's Council
Turkey Grand National Assembly
USA Congress
Vietnam National Assembly
Venezuela National Congress
Zambia National Assembly1. 1975-ம் ஆண்டு தொடங்கிய ரஜினியின் சினிமா பயணத்தில் அவர் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள். வெறும் ஆறே ஆறு காட்சிகளில் மட்டும் நடித்த அவர் பேசிய முதல் வசனம் “பைரவி வீடு இதுதானே…” என்பது தான். அந்தக் காட்சியில் ஒரு வீட்டின் கேட்டை திறந்துகொண்டு வருவதுதான் அவர் தோன்றிய முதல் காட்சி. இன்று, அவரது வீட்டு கேட் திறப்பதற்காக அதிகாலையிலேயே கேட்டுக்கு முன்னால் ஏராளமான ரசிகர்கள்!

2.வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாக நடித்த படம் பைரவி. இதில்தான் அவருக்கு ‘சூப்பர் ஸ்டார்’பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர் கலைப்புலி எஸ்.தாணு. சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் முதல் தடவையாக டைட்டில் கார்டில்தான் போடப்பட்ட படம், ‘நான் போட்ட சவால்’.

3. ரஜினி பேசிய முதல் பன்ஞ் டயலாக் “இது எப்படி இருக்கு?”. படம் 16 வயதினிலே.

4.மூன்று முடிச்சு தொடங்கி எந்திரன் வரை பல படங்களில் வில்லனாக நடித்த ரஜினி, கொடூர வில்லனாக நடித்த படம், கமல் ஹூரோவாக நடித்த ‘ஆடுபுலி ஆட்டம்’. வில்லத்தனங்களை செய்து விட்டு “இது ரஜினி ஸ்டைல்” என்பார். அதன்பின், “ரஜினி ஸ்டைல்” என்ற கூற்று, பாப்புலரானது.

5.ரஜினியின் முதல் தோல்விப் படம், ‘வணக்கத்துக்குரிய காதலியே’.ராஜேந்திரகுமார் அதே பெயரில் எழுதிய நாவல் படமாக தயாரிக்கப்பட்டு, தோல்வியடைந்தது. ரஜினி நடித்த முதல் திகில் படம் ஆயிரம் ஜென்மங்கள். பிராமண பாஷை பேசி நடித்த படம் சதுரங்கம், சென்னைத் தமிழ் பேசி நடித்த படம் தப்புத் தாளங்கள்.

6. ஸ்ரீபிரியாதான், இன்றைய தேதிவரை ரஜினியுடன் அதிக படங்களில் ஹீரோயின் ஆக நடித்தவர்.அப்படியிருந்தும், ‘நீயா’ படத்தில் ரஜினியை நடிக்க கேட்டபோது, நான்கைந்து ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று மறுதத்த‌.து.

7.ரஜினி, சிவாஜியுடன் நடித்த முதல் படம் ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’. அவருடன் நடித்த கடைசிப் படம் ‘படையப்பா’. முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் ‘பில்லா’. மூன்று வேடங்களில் நடித்த படம் ‘மூன்று முகம்’.

8.கோடிக் கணக்கில் சம்பளம் தர முன்வந்தும் ரஜினி இதுவரை ஒரு விளம்பரப் படத்தில்கூட நடித்ததில்லை.“நான் உபயோகிக்காத ஒரு பொருளை மற்றவர்களை உபயோகிக்கச் சொல்வது தவறு” என்பது அவர் கருத்து.

9.நிஜ வாழ்க்கையில் கண்டக்டராக இருந்த ரஜினி எந்தப் படத்திலும் கண்டக்டராக நடிக்கவில்லை.‘ஆறு புஷ்பங்கள்’ படத்தில் விஜயகுமார் கண்டக்டராக நடிக்க, ரஜினி டிரைவராக நடித்திருந்தார். பாட்ஷா படத்தில் ஒரே ஒரு பாட்டில் கண்டக்டராக வருவார்.

10.ரஜினியின் பேவரேட் பாம்பு சீன் முதலில் இடம் பெற்ற படம், பைரவி. அதில் பாம்பை கையில் வைத்துக்கொண்டு பாட்டுகூட பாடுவார். பாம்பு சீன் புகழ் பெற்ற பட்ம், அண்ணாமலை. அதன்பின், ரஜினி படத்தில் என்ன இருக்கிறதோ, இல்லையோ, பாம்பு இருக்கும் என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள்!

11.தமிழ் படத்தில் மீசை வைத்தால்தான் ஹீரோ என்று எழுதப்படாத விதி இருந்த நாட்களில்,ரஜினி, பாலச்சந்தரின் வற்புறுத்தலுக்காக மீசையில்லாமல் நடித்த முதல் படம் ‘தில்லு முல்லு’.அவர் நடித்த முதல் முழு நீள காமெடி படமும் அதுதான். ரஜினி தயாரித்த முதல் படம் ‘மாவீரன்’ . திரைக்கதை வசனம் எழுதிய படம் ‘வள்ளி’. பாடல் பாடிய படம் ‘மன்னன்’.

12.ரஜினியின் 50-வது படம், தமிழ் படமல்ல. ‘டைகர்’ என்ற தெலுங்கு படம். 100-வது படம் ‘ஸ்ரீராகவேந்திரர்’.ஆரம்பத்தில், ஸ்ரீராகவேந்திரர் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க மறுத்தார். பின்னர் ரஜினியின் அன்புக்காக இயக்கினார்.ரஜினியின் அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன்.

13.குறுகிய காலத்தில் நடித்த படம் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’. 6 நாட்களில் நடித்துக் கொடுத்தார். 9 நாட்களில் நடித்த படம் ‘மாங்குடி மைனர்’.மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமான பிறகு நடித்த ‘தர்மயுத்தம்’ படத்திலும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்தார்.

14.இளைஞன், நடுத்தர வயது குடும்பஸ்தன். தள்ளாடும் முதியவர் என்ற மூன்று கெட்அப்களில் நடித்த படம் ‘ஆறிலிலிருந்து அறுபது வரை’. ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்துக்கு தேசிய விருந்து கிடைக்கவில்லை. முள்ளும் மலரும், மூன்று முகம், முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி படங்களுக்காக மாநில விருதைப் பெற்றார். மத்திய அரசு வழங்கிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷன்.

15.ரஜினி நடித்த சில படங்களின் பெயர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டன. ‘நானே ராஜா நீயே மந்திரி’என்ற டைட்டில் ‘தம்பிக்கு எந்த ஊரு’ என்று மாறியது. (‘நானே ராஜா நானே மந்திரி’ என்ற பெயரில் விஜயகாந்த் நடித்த படம் ஒன்று வெளியானது) ‘நான் காந்தி அல்ல’ படத்தின் டைட்டிலில் காந்தியின் பெயர் வருவதால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, ‘நான் மகான் அல்ல’ என மாறியது. ‘காலம் மாறிப்போச்சு’ என்ற டைட்டில் ‘தர்மதுரை’ ஆனது.

16.ரஜினியோடு பிரதான கேரக்டரில் பெண்கள் மோதி வெளியான படங்கள், மூன்று முடிச்சு, மாப்பிள்ளை, மன்னன், படையப்பா. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் எந்திரன். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் அன்புள்ள ரஜினிகாந்த்.

17.முதல் சினிமாஸ்கோப்  படம் பொல்லாதவன். முதல் 70 எம்எம் படம் மாவீரன்.முதல் 3டி படம் சிவாஜி . முதல் அனிமேஷன் படம் கோச்சடையான் (இன்னமும் வெளியாகவில்லை).

18.முதன் முதலாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட இந்திய படம் முத்து. ஜப்பானில்ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட முதல் இந்திய நடிகர் ரஜினி. ரஜினி நடித்த ஹாலிவுட் திரைப்படம் பிளட் ஸ்டோன். நேரடியாக நடித்த இந்திப் படங்களின் எண்ணிக்கை 16.

19.தமிழ் சினிமா புள்ளிகளைப் பற்றி அதிகமான புத்தகங்கள் வெளிவந்திருப்பது ரஜினி பற்றித்தான். அவரது வாழ்க்கை பற்றி நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். ரஜினியை சுயசரிதை எழுதச் சொல்லிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் “சுயசரிதை எழுதும் அளவுக்கு என் வாழ்க்கை பரிசுத்தமானதல்ல. அந்த அளவுக்குபெரிதாக சாதித்தவனும் அல்ல. நான் நடிச்சு மக்களை சந்தோஷப்படுத்துறேன். அவர்கள் பணமாக எனக்கு திருப்பித்தந்து என்னை சந்தோஷப்படுத்துகிறார்கள். அவ்வளவுதான்”. அதுதான் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.


தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:


01. இராணுவம்< (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப்படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு.

02. கடற்புலிகள்<
நீரடி நீச்சல் பிரிவு, கடல் வேவு அணி, சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி, அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்), நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி, கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி.

03. வான்படை

04. கரும்புலிகள்

05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு.

06. புலனாய்வுத்துறை

07. வேவுப்பிரிவு

08. ஒளிப்பதிவுப் பிரிவு

09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு

10. கணணிப் பிரிவு

11. மாணவர் அமைப்பு

12. தமிழீழ வைப்பகம்

13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

14. அனைத்துலகச் செயலகம்

15. சுங்கவரித் துறை

16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்

17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி

18. அரசறிவியற் கல்லூரி

19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு

20. வன வளத்துறை

21. தமிழீழ நிதித்துறை

22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்

23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்

24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை

25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)

26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)

27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)

28. வெற்றிமனை (வலுவிழந்தோர்)

29. அன்பு இல்லம் (முதியோர்)

30. பொத்தகசாலை

31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ்

32. ஈழநாதம் செய்தி இதழ்

33. வெளிச்சம் செய்தி இதழ்

34. ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை

35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி

36. நிதர்சனம்

37. புலிகளின் குரல் வானொலி

38. மாவீரர் பணிமனை

39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த
போராளிகளுக்கான)

40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)

41. சேரன் வாணிபம்

42. சேரன் சுவையகம்

43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு

44. பாண்டியன் வாணிபம்

45. பாண்டியன் சுவையூற்று

46. சோழன் தயாரிப்புகள்

47. வழங்கற் பிரிவு

48. சூழல் நல்லாட்சி ஆணையகம்

49. நிர்வாக சேவை

50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு

51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு

52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு

53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்

54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை

55. தமிழீழ விளையாட்டுத்துறை

56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.