twitter
rss


வாழ்க்கை நேரத்தால் ஆனது

“ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”

வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ! நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...

01.ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.

02.ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.

03.ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று
தூக்கிலிடப்படும் கைதியிடம் கேளுங்கள்.

04.ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று
உயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.

05.ஒரு நாளின் மதிப்பு என்னவென்று - அன்று வேலை
கிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.

06.ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார
பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.

07.ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று
குறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.

08.ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று
தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.

09.ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று
உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.

0 comments: