1.திருக்கோணேஸ்வரத்தில் வீற்றிருக்கும் இறைவன் இறைவியின் பெயர் என்ன?
கோணேஸ்வரர்,மாதுமையாள்
2.ஆலயத்தில் ஆண்கள் செய்யும் நமஸ்காரத்தை எப்படி அழைப்பர்?
அட்டாங்க நமஸ்காரம்
3.ஆலயத்தில் பெண்கள் செய்யும் நமஸ்காரத்தை எப்படி அழைப்பர்?
பஞ்சாங்க நமஸ்காரம்
4.நாயன்மார்கள் எத்தனை பேர்?
63
5.கிருஷ்ண பகவானின் தாய் தந்தையின் பெயர் என்ன?
தேவகி, வாசுதேவர்
6.கந்தபுராணத்தை எழுதியவர் யார்?
கச்சியப்ப சிவாச்சாரியார்
7.ஈழத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் விக்கிரகங்கள் உள்ள ஆலயம் எது?
முன்னேச்சரம்
8.வேதத்தின் மறுபெயர்கள் எவை?
சுருதி,மறை, எழுதாமறை
9.சிவன் பாதி உமை பாதியாக இருக்கும் வடிவம் எது?
அர்த்தநாரீஸ்வரர்
10.விஷ்ணு சங்கு மட்டும் ஏந்தி உள்ள தலம் எது?
திருவீழிமிழலை
1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை
நேரம்
இறப்பு
வாடிக்கையளர்கள்
2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளை விரோதியாக்கும்
நகை
மனைவி
சொத்து
3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது
புத்தி
கல்வி
நற்பண்புகள்
4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்
உண்மை
கடமை
இறப்பு
5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை
வில்லிலிருந்து அம்பு
வாயிலிருந்து சொல்
உடலிலிருந்து உயிர்
6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்
தாய்
தந்தை
இளமை
7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது
சொத்து
ஸ்திரி
உணவு
8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு
தாய்
தந்தை
குரு
1.வருவதும் போவதும் 2 இன்பம் துன்பம்
2.வந்தால் போகாதது 2 புகழ் பழி
3.போனால் வராதது 2 மானம் உயிர்
4.தானாக வருவது 2 இளமை முதிர்வு
5.நம்முடன் வருவது 2 பாவம் புண்ணியம்
6.அடக்க முடியாதது 2 ஆசை துக்கம்
7.தவிர்க்க முடியாதது 2 பசி பந்தம்
8.நம்மால் பிரிக்க முடியாதது 2 பந்தம் பாசம்
9.அழிவைத் தருவது 2 பொறாமை கோபம்
10.எல்லோருக்கும் சமமானது 2 பிறப்பு இறப்பு