சுந்தரமுர்த்தி நாயனார் - www.anpunila.com

பொதுஅறிவு. தன்னம்பிக்கை.

va

Wednesday, May 21, 2008

சுந்தரமுர்த்தி நாயனார்


1.சுந்தரமுர்த்தி நாயனார் பிறந்த ஊர் "திருநாவலூர்".

2.சுந்தரமுர்த்தி நாயனார் மூன்றாம் "குரவர்".

3.சுந்தரமுர்த்தி நாயனாரின் தந்தையார் பெயர் "சடையனார்".

4.சுந்தரமுர்த்தி நாயனாரின் தாயார் பெயர் "இசைஞானி".

5.சுந்தரமுர்த்தி நாயனாரின் இயற்பெயர் "நம்பியாரூரர்".

6.சுந்தரமுர்த்தி நாயனாரை வளர்த்த மன்னரின் பெயர் "நரசிங்கமுனையர்".

7.சுந்தரமுர்த்தி நாயனாரைப் பார்த்து ஆரூரன் என் அடிமை என்று கூறியவர் "சிவபெருமான்".

8.அடிமைச் சாசன ஓலையைக் கிழித்தவர் "சுந்தர்".

9.முதிய அந்தணர் வேடம் போட்டுக் கல்யாண மண்டபத்துக்க்கு வந்தவர் "சிவபெருமான்".

10.கல்யாண மண்டபத்துக்கு வந்த முதிய அந்தணர் "திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்தவர்".

11.சுந்தரமுர்த்தி நாயனார் சிவபெருமானை "பித்தன்" என்று அழைத்தார்.

12.ஆரூரனுக்கு இறைவன் "சுந்தரர்,வந்தொண்டன்" என்ற பெயர்களை வழங்கினார்.

13."பித்தா பிறை சூடி" என்ற தேவாரத்தைப் பாடியவர் சுந்தரமுர்த்தி நாயனார்.

14.சுந்தரமுர்த்தி நாயனாரை மக்கள் "தம்பிரான் தோழன்" என்று அழைத்தனர்.

15."திருவதிகையில்" இறைவன் சுந்தரமுர்த்தி நாயனாருக்கு காட்சி கொடுத்தார்.

16.சுந்தரமுர்த்தி நாயனாரின் மனைவியார்களின் பெயர்கள் "பரவையார்,,சங்கிலியார்".

17.சுந்தரமுர்த்தி நாயனாரின் குடும்பத்திற்கு உணவுப் பொருட்களை அனுப்பியவர் "குண்டையூர்க கிழார்".

18.சுந்தரமுர்த்தி நாயனாரின் வளர்ப்பு மகள்மாரின் பெயர்கள் "சிங்கடி,வனப்பகை".

19செங்கற்கள் பொற்கற்களாக மாறியபோது பாடப்பட்ட தேவாரம் "தம்மையே புகழ்ந்திச்சை பாசினும்".

20.சுந்தரமுர்த்தி நாயனாருக்கு பொற்காசுகள் கிடைத்த தலம் "விருத்தாசலம்".

21.மணிமுத்தா நதியில் சுந்தரமுர்த்தி நாயனார் இட்ட பொருள் "பொற்காசு"

22.சுந்தரமுர்த்தி நாயனார் பொற்காசுகளை "கமலாலயம் " குளத்தில் எடுத்தார்.

23.சுந்தரமுர்த்தி நாயனார் தன் பார்வையை இழந்த இடம் "திருவொற்றியூரின் எல்லையில்".

24.சுந்தரமுர்த்தி நாயனார் இடது கண்ணைப் பெற்ற தலம் "காஞ்சிபுரம்".

25.சுந்தரமுர்த்தி நாயனார் வலது கண்ணைப் பெற்ற தலம் "திருவாரூர்".

No comments: