twitter
rss












நவீன `கஜினி'!

பதின்மூன்று தடவை தொடர் தோல்விக்குப் பின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றவரை `நவீன கஜினி' என்று சொல்லலாம்தானே!

மும்பையைச் சேர்ந்த 25 வயது இளைஞரான சோகைப் சல்மானிதான் அந்தக் `கஜினி!'

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் டூ தேர்வில் தோல்வியுறுபவர்கள் ஒருமுறை... இருமுறை... அதிகமாக மூன்று முறை முயற்சி செய்வார்கள்.

பின்னர் விட்டு விடுவார்கள்.

ஆனால் சல்மானி தனது முதல் முயற்சியில் தோல்வி அடைந்ததும் மீண்டும்... மீண்டும்... மீண்டும் தேர்வு எழுதக்னார்.

தனது 14-வது முயற்சியில் வெற்றக்கரமாகத் தேறியிருக்கிறார்!

மும்பை அஞ்சுமன் இஸ்லாம் உயர்நிலைப் பள்ளி யில் 10-ம் வகுப்பு படித்தார் சல்மானி.

1999-ம்ஆண்டு இவர் முதல் முறையாக எஸ்.எஸ். எல்.சி. தேர்வு எழுதினார். அதில் உருது பாடத்தில் மட்டுமே தேறினார்.

அத்துடன் படிப்பை மூட்டை கட்டி வைத்த சல் மானி, சலூன் வைத்திருக்கும் அப்பா அக்கீல் கிராத்புரிக்கு உதவியாக இருக்க ஆரம்பித்தார்.

சற்று இடைவெளிக்குப் பின் 2000-ம் ஆண்டு அக்டோபரில் மீண்டும் தேர்வு எழுதினார் சல்மானி. மீண்டும் தோல்வி!

மீண்டும் படிப்பில் தீவிரமாக இறங்கினார் சல்மானி. ஓர் இரவு நேர டுட்டோரியலில் சேர்ந்து படித்தார். அதற்குக் கொஞ்சம் பலன் இருந்தது. 2003-ம் ஆண்டு மார்ச் தேர்வில் அறிவியல் பாடத்தில் தேறினார்.

2004-ம் ஆண்டு மீண்டும் உருது, அறிவியல் பாடங்களில் மட்டும்தான் தேர்ச்சி.

ஆனால் அந்தத் தேர்வுக்குப்பின் மனத்தளர்ச்சிக்குப் பதில் ஊக்கம் பெற்றார் சல்மானி. `எப்படியும் எல்லா படங்களிலும் `பாஸ்' செய்தே தீருவது!'

2005-ம் ஆண்டு மார்ச்சில் ஆங்கிலப் பாடத்தில் மட்டும் தேர்ச்சி. அதே ஆண்டு அக்டோபரில் எழுதிய எந்தத் தேர்விலும் வெற்றி கிட்டவில்லை.

``2006-ம் ஆண்டு மார்ச்சில் கணக்குப் பாடத்தை `பாஸ்' செய்தேன். அதே ஆண்டு அக்டோபரில் இந்தி, மராத்தியை முடிச்சேன். அதன் பிறகு மீதமிருந்த ஒரே பாடம், சமூக அறிவியல். ஆனா அதுக்கு மேலும் ரெண்டு தடவை பரீட்சை எழுத வேண்டியதாயிடுச்சு... இந்த வருசம் மார்ச்சில என்னால தேர்ச்சி பெற முடியல. ஆனா அக்டோபர்ல ஒருவழியா தேறிட்டேன்...'' என்கிறார் சல்மானி.

இத்தனை `படையெடுப்பு'க்குப் பின் எஸ்.எஸ்.எல்.சி.யில் வெற்றி பெற்றது எப்படி இருந்ததாம்?

``என் வாழ்க்கையிலேயே ரொம்ப மகிழ்ச்சியான நாள், தேர்வு முடிவு வெளியான நாள்தான். எங்கப்பா சொன்னபடி எஸ்.எஸ்.எல்.சி.யில் பாசானதில் சந்தோஷமோ சந்தோஷம்!'' என்று பூரிப்பாய்க் கூறுகிறார் சல்மானி.v

0 comments: