twitter
rss





ஐக்கிய நாடுகள் சபை (United Nation Organisation)


இரண்டாம் உலகப் போரின்போது அச்சு நாடுகளை எதிர்த்துப் போரிட்ட ரூஸ்வெல்ட்,வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஜோசப் ஸ்டாலின் ஆகிய நேசநாட்டுத் தலைவர்களின் கூட்டு முயற்சியால் ஐக்கிய நாடுகள் சபை (சுருக்கமாக ஐ.நா. சபை) உருவானது.

1944ல் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில்,டம்பர்டன் ஓக்ஸ் என்ற இடத்தில் நடந்த நேசநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் ஐ.நா. சபைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.1945ல் அமெரிக்காசான்ஃபிரான்ஸ்சிஸ்கோ நகரில் நடந்த மாநாட்டின் சாசனத்தில் நேச நாட்டு தலைவர்கள் கையெழுத்திட்டனர்.1945 அக்டோபர் 24ல் ஐ.நா.சபை உதயமாகிச் செயல்படத் தொடங்கியது.

உலக சமாதானம், பாதுகாப்பு, சமத்துவம், நாடுகளிடையே நல்லுறவு, பன்னாட்டு சமூகம், அரசியல், பொருளாதாரம், ஒத்துழைப்பு ஆகியவற்றை நாடுகளுக்கிடையே ஏற்படுத்துவதே இச்சபையின் நோக்கமாகும்.
ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ருஷ்யன், சீனம், அரபி மற்றும் ஸ்பானிஷ் ஆகியா ஆறு மொழிகள், ஐநாவின் அலுவலக மொழிகளாக உள்ளன. அமைதியை விரும்பும் எந்த நாடும் இதில் உறுப்பினராக சேர முடியும்.

இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இச்சபை தனக்கென தபால் தலைகள் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது. அக்டோபர் 24 ஐக்கிய நாடுகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஐ. நா.வில் 184 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இச்சபை ஆரம்பிக்கப்பட்ட 1945ம் ஆண்டிலேயே இந்தியா உறுப்பினராக சேர்ந்துவிட்டது. (உறுப்பினர் அல்லாத சில நாடுகள் கிரிபாடி, சஹ்ராவி அரபுக் குடியரசு, சுவிட்சர்லாந்து, டோங்கோ, துவலு, நெளரு, பெலராஸ், பாலஸ்தீனம்,
வத்திக்கான் நகரம் எனக்கு தெரிந்தவரைக்கும். ? )

ஐ.நா.சபை ஆறு உள் அமைப்புக்களைக் கொண்டு செயல்படுகிறது.
அவை:

1.பொதுச்சபை (General Assembaly)

2.பாதுகாப்புக் குழு (Security Council)

3.சமூகப் பொருளாதாரக் குழு (Social And Economic Council)

4.பொறுப்பாண்மைக் குழு (Trusteeship Council)

5.பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice)

6.செயலகம் (secretariat)



*************************************************************
**************************************************************


0 comments: