twitter
rss



1. 1975-ம் ஆண்டு தொடங்கிய ரஜினியின் சினிமா பயணத்தில் அவர் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள். வெறும் ஆறே ஆறு காட்சிகளில் மட்டும் நடித்த அவர் பேசிய முதல் வசனம் “பைரவி வீடு இதுதானே…” என்பது தான். அந்தக் காட்சியில் ஒரு வீட்டின் கேட்டை திறந்துகொண்டு வருவதுதான் அவர் தோன்றிய முதல் காட்சி. இன்று, அவரது வீட்டு கேட் திறப்பதற்காக அதிகாலையிலேயே கேட்டுக்கு முன்னால் ஏராளமான ரசிகர்கள்!

2.வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாக நடித்த படம் பைரவி. இதில்தான் அவருக்கு ‘சூப்பர் ஸ்டார்’பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர் கலைப்புலி எஸ்.தாணு. சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் முதல் தடவையாக டைட்டில் கார்டில்தான் போடப்பட்ட படம், ‘நான் போட்ட சவால்’.

3. ரஜினி பேசிய முதல் பன்ஞ் டயலாக் “இது எப்படி இருக்கு?”. படம் 16 வயதினிலே.

4.மூன்று முடிச்சு தொடங்கி எந்திரன் வரை பல படங்களில் வில்லனாக நடித்த ரஜினி, கொடூர வில்லனாக நடித்த படம், கமல் ஹூரோவாக நடித்த ‘ஆடுபுலி ஆட்டம்’. வில்லத்தனங்களை செய்து விட்டு “இது ரஜினி ஸ்டைல்” என்பார். அதன்பின், “ரஜினி ஸ்டைல்” என்ற கூற்று, பாப்புலரானது.

5.ரஜினியின் முதல் தோல்விப் படம், ‘வணக்கத்துக்குரிய காதலியே’.ராஜேந்திரகுமார் அதே பெயரில் எழுதிய நாவல் படமாக தயாரிக்கப்பட்டு, தோல்வியடைந்தது. ரஜினி நடித்த முதல் திகில் படம் ஆயிரம் ஜென்மங்கள். பிராமண பாஷை பேசி நடித்த படம் சதுரங்கம், சென்னைத் தமிழ் பேசி நடித்த படம் தப்புத் தாளங்கள்.

6. ஸ்ரீபிரியாதான், இன்றைய தேதிவரை ரஜினியுடன் அதிக படங்களில் ஹீரோயின் ஆக நடித்தவர்.அப்படியிருந்தும், ‘நீயா’ படத்தில் ரஜினியை நடிக்க கேட்டபோது, நான்கைந்து ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று மறுதத்த‌.து.

7.ரஜினி, சிவாஜியுடன் நடித்த முதல் படம் ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’. அவருடன் நடித்த கடைசிப் படம் ‘படையப்பா’. முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் ‘பில்லா’. மூன்று வேடங்களில் நடித்த படம் ‘மூன்று முகம்’.

8.கோடிக் கணக்கில் சம்பளம் தர முன்வந்தும் ரஜினி இதுவரை ஒரு விளம்பரப் படத்தில்கூட நடித்ததில்லை.“நான் உபயோகிக்காத ஒரு பொருளை மற்றவர்களை உபயோகிக்கச் சொல்வது தவறு” என்பது அவர் கருத்து.

9.நிஜ வாழ்க்கையில் கண்டக்டராக இருந்த ரஜினி எந்தப் படத்திலும் கண்டக்டராக நடிக்கவில்லை.‘ஆறு புஷ்பங்கள்’ படத்தில் விஜயகுமார் கண்டக்டராக நடிக்க, ரஜினி டிரைவராக நடித்திருந்தார். பாட்ஷா படத்தில் ஒரே ஒரு பாட்டில் கண்டக்டராக வருவார்.

10.ரஜினியின் பேவரேட் பாம்பு சீன் முதலில் இடம் பெற்ற படம், பைரவி. அதில் பாம்பை கையில் வைத்துக்கொண்டு பாட்டுகூட பாடுவார். பாம்பு சீன் புகழ் பெற்ற பட்ம், அண்ணாமலை. அதன்பின், ரஜினி படத்தில் என்ன இருக்கிறதோ, இல்லையோ, பாம்பு இருக்கும் என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள்!

11.தமிழ் படத்தில் மீசை வைத்தால்தான் ஹீரோ என்று எழுதப்படாத விதி இருந்த நாட்களில்,ரஜினி, பாலச்சந்தரின் வற்புறுத்தலுக்காக மீசையில்லாமல் நடித்த முதல் படம் ‘தில்லு முல்லு’.அவர் நடித்த முதல் முழு நீள காமெடி படமும் அதுதான். ரஜினி தயாரித்த முதல் படம் ‘மாவீரன்’ . திரைக்கதை வசனம் எழுதிய படம் ‘வள்ளி’. பாடல் பாடிய படம் ‘மன்னன்’.

12.ரஜினியின் 50-வது படம், தமிழ் படமல்ல. ‘டைகர்’ என்ற தெலுங்கு படம். 100-வது படம் ‘ஸ்ரீராகவேந்திரர்’.ஆரம்பத்தில், ஸ்ரீராகவேந்திரர் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க மறுத்தார். பின்னர் ரஜினியின் அன்புக்காக இயக்கினார்.ரஜினியின் அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன்.

13.குறுகிய காலத்தில் நடித்த படம் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’. 6 நாட்களில் நடித்துக் கொடுத்தார். 9 நாட்களில் நடித்த படம் ‘மாங்குடி மைனர்’.மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமான பிறகு நடித்த ‘தர்மயுத்தம்’ படத்திலும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்தார்.

14.இளைஞன், நடுத்தர வயது குடும்பஸ்தன். தள்ளாடும் முதியவர் என்ற மூன்று கெட்அப்களில் நடித்த படம் ‘ஆறிலிலிருந்து அறுபது வரை’. ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்துக்கு தேசிய விருந்து கிடைக்கவில்லை. முள்ளும் மலரும், மூன்று முகம், முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி படங்களுக்காக மாநில விருதைப் பெற்றார். மத்திய அரசு வழங்கிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷன்.

15.ரஜினி நடித்த சில படங்களின் பெயர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டன. ‘நானே ராஜா நீயே மந்திரி’என்ற டைட்டில் ‘தம்பிக்கு எந்த ஊரு’ என்று மாறியது. (‘நானே ராஜா நானே மந்திரி’ என்ற பெயரில் விஜயகாந்த் நடித்த படம் ஒன்று வெளியானது) ‘நான் காந்தி அல்ல’ படத்தின் டைட்டிலில் காந்தியின் பெயர் வருவதால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, ‘நான் மகான் அல்ல’ என மாறியது. ‘காலம் மாறிப்போச்சு’ என்ற டைட்டில் ‘தர்மதுரை’ ஆனது.

16.ரஜினியோடு பிரதான கேரக்டரில் பெண்கள் மோதி வெளியான படங்கள், மூன்று முடிச்சு, மாப்பிள்ளை, மன்னன், படையப்பா. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் எந்திரன். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் அன்புள்ள ரஜினிகாந்த்.

17.முதல் சினிமாஸ்கோப்  படம் பொல்லாதவன். முதல் 70 எம்எம் படம் மாவீரன்.முதல் 3டி படம் சிவாஜி . முதல் அனிமேஷன் படம் கோச்சடையான் (இன்னமும் வெளியாகவில்லை).

18.முதன் முதலாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட இந்திய படம் முத்து. ஜப்பானில்ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட முதல் இந்திய நடிகர் ரஜினி. ரஜினி நடித்த ஹாலிவுட் திரைப்படம் பிளட் ஸ்டோன். நேரடியாக நடித்த இந்திப் படங்களின் எண்ணிக்கை 16.

19.தமிழ் சினிமா புள்ளிகளைப் பற்றி அதிகமான புத்தகங்கள் வெளிவந்திருப்பது ரஜினி பற்றித்தான். அவரது வாழ்க்கை பற்றி நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். ரஜினியை சுயசரிதை எழுதச் சொல்லிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் “சுயசரிதை எழுதும் அளவுக்கு என் வாழ்க்கை பரிசுத்தமானதல்ல. அந்த அளவுக்குபெரிதாக சாதித்தவனும் அல்ல. நான் நடிச்சு மக்களை சந்தோஷப்படுத்துறேன். அவர்கள் பணமாக எனக்கு திருப்பித்தந்து என்னை சந்தோஷப்படுத்துகிறார்கள். அவ்வளவுதான்”. அதுதான் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.


2 comments:

  1. வணக்கம் நண்பரே..
    பொது அறிவுக் களஞ்சியங்களோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய தகவல்களும் அருமை.. தங்கள் கருத்துரை மூலமே தளத்தை அறிந்து கொண்டேன். தொடர்ந்து வருவேன். நன்றி நண்பா..

  1. தங்கள் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி நண்பா.