1.ரபிளீசியா ஆர்னொல்டா மலர் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் உள்ளது.
2.ரபிளீசியா ஆர்னொல்டா மலர் ஒன்றின் எடை 7 கிலோ, குறுக்களவு மூன்று அடி. மகரந்தத் தண்டுகளையும் தேன் பையையும் தாங்கும் மையப் பகுதியின் குறுக்களவு 30 செ.மீ. இந்தப் பூவின் இதழ் 60 மில்லி மீற்றர் தடிமன் கொண்டது.
3.பூவின் நடுவே உள்ள கிண்ணம் போன்ற குழியில் 10 லீற்றர் நீரை ஊற்றி வைத்திருக்க முடியும். இந்த மலர் விரிந்து இரு நாட்களில் கருகி விடும். இது ஒட்டுண்ணி ரகத்தைச் சேர்ந்ததால் அதற்கென்று தனியாக இலை, தண்டு கிடையாது. பிற தாவரங்களில் ஒட்டிக் கொண்டு வளர்கிறது. நீரையும் பிற சத்துக்களையும் ஒட்டியிருக்கும் தாவரத்தில் இருந்து பெற்றுக் கொள்கிறது.
4.இதைக் கண்டுபிடித்த இரு ஆங்கிலேயர்களின் பெயரால் இந்த மலர் ரபிளீசியா ஆர்னொல்டா (Rafflesia Arnolda) என்று அழைக்கப்படுகிறது.இம்மலரை தமிழில் பிணவல்லி என்று கூறுவர்.இந்த மலரில் படுமோசமான துர்நாற்றம் வீசுகிறது.இம்மலர் தாய்லாந்து,பிலிப்பைன்ஸ் மற்றும் சில நாடுகளில் காணப்படுகிறது.