twitter
rss



உலகின் மிகப்பிரமாண்டமான சரக்குக்கப்பல்,இக்கப்பல் 
டென்மார்க்கில் உள்ள மாஸ்க் கெனி மூலர் (Mærsk Mc-Kinney Møller ) என்பவருக்கு சொந்தமானது.இக்கப்பல் ஆசியாவில் உள்ள தென்கொரியாவில்(Daewoo Shipbuilding & Marine Engineering (DSME), South Korea) கட்டப்பட்டது.
இந்தக் கப்பல் 399 (1309ft) மீட்டர் நீளமானது, இதனுடைய உயரம் 73 மீட்டர்களாகும், அகலம் 59 (194ft) மீட்டர்கள்,ஆழம்30.3 (99ft) மீட்டர். கடலுக்குக் கீழ் இருப்பது 14.5 மீட்டர்கள், அதி கூடிய வேகம் மணிக்கு 43 கி.மீ (23Konts),மேலே அடுக்கப்பட்டுள்ள பெட்டிகளுடன் அளவிட்டால் உயரம் 150 மீட்டராகும்.
இதுஉலகத்தின்நடமாடும்தீவுபோன்றது. இக்கப்பல்உலகசாதனைப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்கப்பலில் ஒரே நேரத்தில் 18.000 முதல் 19.000 கொன்ரேனர் – கொள்கலங்களை கொண்டுசெல்லமமுடியும். 
இக்கப்பலானது ஆங்கில எழுத்துக்கள் E– E –E என்று குறியீட்டுப் பெயரால் அழைக்கப்படுகிறது,

1.Economy of scale : பொருளாதாரத்தை அளவோடு கட்டுப்படுத்தும்
2.Efficiency: எரிசக்தி மிகக் குறைவாக பயன்படும் 
3.Environment : சூழலை அதிகம் மாசுபடுத்தாது.


இக்கப்பல் க்ப்பல் முழுவதும் ம்றுசுழற்சிக்கு(100%recycle)  உட்பட்டது.
மாஸ்க் நிறுவனத்தில் தற்போது சேவையில் உள்ள இதுபோன்ற 20 பெரிய கப்பல்களை எம்மா வகையறாக்கள் என்று டேனிஸ் மொழியில் அழைக்கிறார்கள், அந்தவகைக் கப்பலைவிட இதில் 2500 பெட்டிகள் அதிகம் ஏற்றலாம்.இந்தக் கப்பல் கட்டி அமைக்கப்படுவதுபற்றி இதுவரை டிஸ்கவரி சனல் ஆறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியுள்ளது, அதுமட்டுமல்ல சுமார்  40.000 புகைப்படங்கள் வேறு வெளியாகியுள்ளன.



0 comments: